அன்புமணி ராமதாஸ் ஊடகங்களில் தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அப்போது, “நாங்கள் டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணியில் இல்லை'' என்றார். அதற்கு செய்தியாளர்கள், 'என்ன இப்படி சொல்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அன்புமணி, ''ஏன் திமுக அப்படி இருந்தது கிடையாதா? திமுக டெல்லியில் ஒரு நிலைப்பாடு தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு வைத்திருக்கவில்லையா. இருந்திருக்கிறார்கள் அல்லவா. அந்த நிலைப்பாடு தான் எங்களுடையது. நாங்கள் 2026 இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாமக ஒருமித்த கருத்துடையவர்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும். அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024 தேர்தலில் வகுப்போம். பொறுத்திருங்கள் காத்திருங்கள்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அன்புமணி ராமதாஸ் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. அன்புமணி ராமதாஸை ஒரு அரசியல்வாதியாக நினைப்பதில்லை. அவருடைய பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.