Published on 05/04/2019 | Edited on 05/04/2019
நேற்று காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலையும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகத்தையும் ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர், எதிரணியில் இருக்கும் திமுகவிற்கு சிறிது ஓட்டு உள்ளது, கூட்டணி கட்சிகள் எதற்கும் ஓட்டு கிடையாது. அப்போது தேர்தலில் என்ன நடக்கும், பூத்ல என்ன நடக்கும்... பூத்ல நாமதான் இருப்போம். சொல்றது புரியுதா, இல்லையா? நம்மதான் இருப்போம், நாமதான் இருப்போம். அப்பறம் என்ன? சொல்லணுமா வெளியில, புரிஞ்சுகிட்டிங்கள்ல என்று கூறினார். இது மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.