Skip to main content

“சதுப்புநில நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து அறிவிக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 02/02/2025 | Edited on 02/02/2025
Anbumani Ramadoss says The boundaries of wetland water levels should be defined and declared

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சதுப்பு நிலங்களை பாதுகாப்போம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சிதம்பரம் அருகே பிச்சாவாரத்தில் பாமகவின் பசுமை தாயகம் சார்பில் தமிழக சதுப்பு நிலங்களை காப்போம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சதுப்பு நிலங்களை காப்போம் என பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து சதுப்பு நிலங்களை பாதுகாப்போம் என துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரங்களில் சதுப்பு நிலங்கள் மிக முதன்மையானவையாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 42 ஆயிரத்து 978 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் பெருவாரியான சதுப்பு நிலங்கள் பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன பல்வேறு சதுப்பு நிலங்களில் திடக்கழிவுகள் கழிவுநீர் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. சதுப்பு நிலங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதோடு வெள்ளத்தையும் கட்டுப்படுத்துகின்றன, மாசுகளை கட்டுப்படுத்துகின்றன. மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்துகின்றன, மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரித்து பறவைகளின் ஆதாரமாக உள்ளன புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றன.

அதனால்தான் 2004இல் இந்த பகுதியில் சுனாமி ஏற்பட்டபோது இங்க பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், தமிழக தமிழகத்தில் பட்டியலில் உள்ள 26 ஆயிரத்து 883 சதுப்பு நிலங்களில் எல்லைகள் கடந்த மூன்று மாதங்களில் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என உயர்நீதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்டியலில் உள்ள சதுப்பு நில நீர் நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அப்படி இல்லையேல் இதனை எதிர்த்து பசுமைத்தாயகம் சார்பில் நீதி நீதிமன்றத்திற்கு சென்று நடவடிக்கை எடுப்போம்” என்றார். 

Anbumani Ramadoss says The boundaries of wetland water levels should be defined and declared

இதனைத் தொடர்ந்து அவர்  பிச்சவாரம் சதுப்பு நில காடுகளில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இவருடன் பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், பசுமத்தாயகம் மாநில செயலாளர் அருள், மாநில துணை செயலாளர் அழகரசன், மாவட்ட செயலாளர் ராஜவேல், மாவட்ட தலைவர் ராகவன் உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்