Published on 24/07/2018 | Edited on 24/07/2018
சமீபத்தில் நடந்த பாமகவின் 30வது ஆண்டு நிறைவு விழாவில், தன் பேச்சினிடையே அன்புமணி ராமதாஸ், அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டல் செய்தார்...
"திடீரென்று ஒருவர் சொல்கிறார் 'மதுரையை சிட்னியாக மாற்றப் போகிறோம்' என்று. யார் என்று தெரியுமா? நமது தெர்மோகோல் மன்னன் செல்லூர் ராஜு. எனக்கு ஒரே குழப்பம்... என்னடா இவரு சிட்னியைப் பற்றி பேசுகிறார், இவர் கிட்னியைப் பற்றி பேசினாலும் பரவாயில்லை. ஆட்டு கிட்னியைப் பற்றி பேசலாம். சிட்னியைப் பற்றி ஏன் பேசுகிறாரென சிந்தித்தேன்.
பிறகுதான் புரிந்தது, இவங்க கொள்ளை அடிக்கிற பணம் எல்லாம் ஆஸ்திரேலியாவுக்குதான் போகுது. இதுக்கு முன்பு கொள்ளை அடிக்கும் பணத்தைக் கொண்டு இங்கேயே சொத்து, நிலம், எஸ்டேட் என்று வாங்கினார்கள் பிறகு மாட்டிக்கொண்டனர். அதனால் இப்போ இங்க எதுவும் பண்ணக்கூடாது, வெளிநாட்டுக்கு எடுத்துட்டு போயிடுவோம் என்று சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாக்கு எல்லாம் போகிறது. செல்லூர் ராஜுவுக்கும் சிட்னிக்கும் என்னடா சம்பந்தம் என்றால் கடைசியில் இதுதான் சம்பந்தம். இவர் ஒரு வேளை தெர்மோகோல் கம்பெனியை ஆஸ்திரேலியாவில் திறக்கப் போகிறார் போல."