Published on 07/06/2019 | Edited on 07/06/2019
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு மத்திய மந்திரிசபை விரிவாக்கம் இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பில் தமிழ்நாட்டுத் தலைகள் காய் நகர்த்துதாமே?'’ அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது பெரும் விவாதமாயிடிச்சி. அதனால கேபினட் விரி வாக்கத்தில் இடம் பிடிக்கணும்னு ரவீந்திரநாத் ஒரு ரூட்டிலும், வைத்திலிங்கம் ஒரு ரூட்டிலும் முயற்சிக்கிறார்களாம். இன்னும் சிலருக்கும் ஆசை இருக்கு. பா.ம.க. அன்புமணி, டெல்லியே கதின்னு இருக்கார். தேர்தல் நேரத்தில், அன்பு மணியின் மைத்துனரான காங்கிரஸ் விஷ்ணுபிரசாத், அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி வச்சதை காடுவெட்டி குருவின் ஆன்மாவே மன்னிக்காது.
அன்புமணியைத் தேர்தலில் தோற்கடித்தே தீருவோம்ன்னு சவால் விட்டார். அந்த சவால் பலிச்சிட்டதா விஷ்ணுபிரசாத் தரப்பு நினைக்குது. அன்புமணியோ, ராஜ்யசபா எம்.பி.யாகி, மத்திய மந்திரி பதவியைப் பெறுவதன் மூலம் சரிக்கட்டணும்னு நினைக்கிறாராம். டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை எல்லாம் அன்புமணி சந்திச்சிக்கிட்டு இருக்கார். இதேபோல் அமித்ஷாவை சந்திக்கவும் அன்புமணி நேரம் கேட்டி ருக்கார். என்ன விவரம்ங்கிறதை தெரிஞ் சுக்கிட்ட அமித்ஷா, "முதல்ல ராஜ்யசபா எம்.பி.யா ஆகுங்க. அதன்பிறகு மற்றதைப் பேசிக்கலாம்'னு சொல்லிட் டார். ஜூலை முதல் வாரம் ராஜ்யசபா தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கு. அதனால், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி, அ.தி.மு.க. தன்னை ராஜ்யசபா எம்.பி. யாக்கும்ங்கிற அழுத்தமான நம்பிக்கையில், எடப்பாடி தரப்பின் தொடர்பையும் மெயிண்ட்டெய்ன் பண் ணிக்கிட்டு இருக்கார் அன்புமணி.