Published on 17/03/2019 | Edited on 17/03/2019
அமமுக கட்சியின் செயலாளர் டி.டி.வி தினகரன் தனது கட்சி சார்பில் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து அறிவித்துள்ளார்.

அமமுக சார்பில் நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக ஞான.அருள்மணி என்பவரை அக்கட்சியின் செயலாளர் டி டி வி தினகரன் அறிவித்திருக்கிறார்.

ஞான.அருள்மணி நெல்லை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவில் செயலாளராக உள்ளவர். திசையன்விளை அருகே உள்ள சௌந்திரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவர் தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கடுத்து தென்காசி(தனி) மக்களவை தொகுதியில் வேட்பாளராக பொன்னுத்தாயி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர். இதற்கு முன்பு ராஜபாளையம் யூனியனின் முன்னாள் சேர்மேனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.