குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தநிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் நேற்று மத்தியபிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.என்,யு. பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் 'நாட்டை ஆயிரம் துண்டுகளாக உடைத்துவிடுவோம்' என முழக்கமிட்டுள்ளார்கள். அவர்களை சிறையில் அடைக்க வேண்டாமா? எவரெல்லாம் தேசத்திற்கு எதிராக முழக்கமிடுகிறார்களோ அவர்கள் சிறைக்கம்பிகளுக்கு பின்னே தள்ளப்படுவார்கள்' என அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் என்ன எதிர்ப்பு வந்தாலும் பின் வாங்கப்போவதில்லை, சிஏஏவை அமல்படுத்தியே தீருவோம் என்றும் கூறினார். மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத், அவரது மாநிலத்தில் சிஏஏ அமலாக்கப்படாது என உரத்தக் குரல் எழுப்புகிரார். கமல்நாத்ஜி இது உங்கள் குரலை எழுப்புவதற்கான வயதல்ல. இந்த வயதில் இப்படி கத்துவது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. மத்தியப் பிரதேச பிரச்சினைகளை முதலில் தீருங்கள்" என கிண்டல் செய்யும் விதமாக பேசினார்.