மதுரை விமான நிலையத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், அதிமுகவைப் பொறுத்தவரையில் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். பல்வேறு அரசியல் கட்சிகள் உதயம் ஆகலாம். ஆனால் யார் கட்சி தொடங்கினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
அமெரிக்கா சென்றது அரசு முறை பயணமாக தான் இருந்தது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்க வாழ் தமிழர்களோடு கலந்து பேசி முதலீட்டாளர்களை சந்தித்து பேசினோம். அவர்களும் இங்கே வருவதாக மிகவும் ஆர்வமாக உள்ளனர். உலக வங்கியிடம் சென்று பேசியுள்ளோம். அவர்களும் ஒப்புதல் தந்துள்ளனர். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பெறவே உள்ளது
.
மேலவளவு குற்றவாளிகளை விடுவிக்க விஷயத்திற்கு நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளைத் சொல்லியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்
நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி தொடரும். புதிய கட்சிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, 'அரசியலில் எதுவும் நடக்கலாம்' என்று பதிலளித்தார்.
.
உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அதிமுகவைப் பொறுத்தவரையில் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, விருப்ப மனுக்களை ஆர்வத்துடன் வாங்குவார்கள். இதன் மூலமாகவே தெரிகிறது அதிமுக ஒரு வலுவான இயக்கம். கட்சித் தலைமை கலந்து பேசி தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்றார்.