Published on 11/01/2019 | Edited on 11/01/2019

தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன்தான் அதிமுக கூட்டணி வைக்கும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,
தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மை செய்திருக்கிறார்களோ அவர்கள்தான் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மை செய்வார்களோ அவர்களைத்தான் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு யார் துரோகம் இழைக்கிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.