Skip to main content

அ.தி.மு.க.வுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை... திமுக என்றும் எதிர்க்கட்சி... -செல்லூர் ராஜூ

Published on 25/02/2020 | Edited on 25/02/2020


   
 

மதுரை மாநகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

sellur k. raju



அதனைத் தொடர்ந்து பேசுகையில், மு.க.ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டு வருகிறார். அ.தி.மு.க.வுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை. தி.மு.க. செய்த தவறை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. கிராமங்கள் தோறும் ரேசன் கடைகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், 69 சதவீத இடஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
 

மதுரையில் ரூ.1000 கோடி அளவிற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெறுகிறது, தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்து உள்ளார்,
 

பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு, தி.மு.க.வால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுக பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள். தி.மு.க. என்றுமே தமிழகத்தில் எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும். இவ்வாறு பேசினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்