Published on 24/08/2018 | Edited on 24/08/2018

அதிமுக செயற்குழு வேடிக்கையாக உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை மாலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் கேள்வி எழுப்பியபோது,
எடப்பாடி பழனிசாமி அணியினர் சென்ற ஆண்டு நடத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத நிலையில் மீண்டும் செயற்குழுக் கூட்டம் நடைபெறுவது வேடிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் மக்கள் விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என்றார்.