கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்,18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது.வரும் மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி,சூலூர்,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வெற்றி பெரும் கட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் அணைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்திலும் மற்றும் பணத்தையும் அதிகமாக செலவு செய்துள்ளனர்.
இதில் தினகரனின் அமமுக கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக ஆளும் கட்சி அமைச்சர்கள் பண உதவி செய்தது மட்டுமில்லாமல் தேர்தலில் அதிமுக கட்சிக்கு எதிராக ஒரு சில உள்ளடி வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த தகவலை உளவுத்துறை மூலம் கேட்டறிந்த எடப்பாடி பெரும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மே 23ஆம் தேதி தேர்தல் முடிவு வந்தவுடன் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
மேலும் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்ற ஒரு பெண் அமைச்சரும் தேர்தல் பணியை செய்யவில்லை என்ற தகவலும் எடப்பாடிக்கு எட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுக்கு பின் ஆளும் கட்சிக்கு சாதகமாக முடிவு வந்தால் கட்சியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர தயாராக கட்சி மேலிடம் உள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.