கடந்த ஞாயிற்றுக்கிழமை கராத்தே தியாக ராஜனையும், திங்கள்கிழமை செ.கு.தமிழரசனையும், செவ்வாய்க்கிழமை திருநாவுக்கரசரையும் சந்தித்தார் ரஜினி. அந்த சந்திப்பின்போது, தனது 3 திட்டங்களையும் அவர்களிடம் ரஜினி விவரிக்க, "நீங்கள் சொல்வது ஓ.கே.தான்", ஆனால், தமிழக அரசியலில் உங்கள் முகத்திற்குத்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். நீங்கள் சுட்டிக்காட்டும் நபர்களை மக்கள் ஏற்பது கடினம். அரசியல் மாற்றம் உங்களிடமிருந்து துவங்க வேண்டுமென்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
உங்கள் தலைமையில் அதிகாரம் இருப்பதுதான் சரியானது. யாரையோ ஒருவரை முதல்வராக்கினால் அவர் செய்கிற தவறுகள் உங்களைத்தான் பாதிக்கும். முதல்வர் நாற்காலியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு கீழே இருப்பவர்கள் தவறு செய்ய யோசிப்பார்கள். மற்றபடி உங்கள் முடிவுகளில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை'' என வலியுறுத்தினார் கராத்தே தியாகராஜன். இதே ரீதியில் செ.கு.தமிழரசனும் சொல்லியிருக்கிறார். திருநாவுக்கரசரோ ரஜினியின் முடிவுகளில் 200 சதவீதம் திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.