தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு இடம் தராமல் தவிர்க்கவே ஆளும் அதிமுக ஆட்சி மேயர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை தவிர்த்து, மறைமுக தேர்தல் மூலம் நடத்த ஆளும்கட்சி முயற்சி செய்து வருகிறது என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசை பாஜக கட்சி கேட்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செம்மலையிடம், 'ஒருவேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி, ரஜினிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்தால், அதிமுகவால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இந்த கேள்விக்கு பதிலளித்த செம்மலை அதிமுக கூட்டணியில் இன்றுவரை பாஜக ஒரு அங்கமாக உள்ளது. ஒருவேளை நாளை கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணியிலிருந்து பிரிந்தால், அதிமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. பாஜகவுக்கு தான் பெரும் நஷ்டம் ஏற்படும். மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் இருப்பதால் இரண்டு ஆட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. அதற்காக கட்சியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அதிமுகவிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பாஜக தாராளமாக பிரியலாம் . அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று கூறியிருந்தார். தற்போது பாஜக மாநில பொருளாளர் சேகரும் அதிமுக அரசை விமர்சித்து பேசி வருவதால் கூட்டணியில் புதிய குழப்பம் ஏற்பட்டடுள்ளது.