Skip to main content

கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு - சு.சாமி கண்டனம்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
sw

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் டுவிட்டரில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் மற்றும் அவர் ஒரு 420 ஆவார். பிறகு ஏன் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு நான்கு மாநில முதல்வர்களும்  அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்? என கேட்டுள்ளார். 

 

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரி தொடர்ந்து ஏழாவது நாளாக கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கெஜ்ரிவால்.

 

 மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னர் மாளிகையிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால்,  கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்று அவரது மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

 

இந்நிலையில்,  சுப்பிரமணிய சாமி, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் மற்றும் அவர் ஒரு 420 ஆவார்.  அவருக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும்? என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்