Skip to main content

மத்திய மந்திரி பட்டியலில் அதிமுக இல்லை?

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

மத்திய மந்திரி பதவி கூட்டணி கட்சிகளுக்கும் கொடுக்கப்படும் என்று பாஜக அறிவித்தது.இதனை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக கட்சிக்கு மத்திய மந்திரி சபையில் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர் பார்த்து வருகின்றனர்.இதில் அதிமுக கட்சியில் சீனியரான வைத்தியலிங்கத்துக்கு மத்திய மந்திரி பதவியும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு இணை அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

admk



இந்த நிலையில் சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே மத்திய மந்திரி கொடுக்கப்பட்டுள்ளது செய்திகள் வெளியாகி வருகின்றன.இதனால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இருந்தாலும் இன்று மாலை அதிமுகவிற்கு மத்திய மந்திரி சபையில் இடம் உள்ளதா இல்லையா என்பது தெரிய வரும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சார்ந்த செய்திகள்