Skip to main content

ஆலோசனை கூட்டம் குறித்து வாய் திறக்காமல் நழுவிய அதிமுகவினர்...

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

இன்று காலை முதல் அதிமுக மாவட்ட செயலாளர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஒற்றைத்தலைமை சர்ச்சை குறித்து ஆலோசனை போன்றவை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

admk party meeting

 

இந்நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுகவின் நிர்வாகிகள் ஒருவர் கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் நேராக தங்கள் வாகனங்களை ஏறி புறப்பட்டனர். தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்திற்கு பிறகு நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திக்காததற்கு அதிமுக தலைமையின் உத்தரவே காரணமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. மேலும் அமைச்சர் ஜெயகுமாரோ அல்லது வேறு மூத்த நிர்வாகிகளில் யாரேனும் ஒருவரோ மாலை செய்தியாளர்களை சந்தித்து, கூட்டம் குறித்த விபரங்களை பகிர்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்