அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா பெங்களூர் சிறையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும் போது, சசிகலா சிறையில் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. விரைவில் சசிகலா விடுதலையாக பிராத்திக்கிறேன் என்றும், அவர் வெளியே வந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பரபரப்பாக பேசியுள்ளார். இதனையடுத்து சென்னை திருவேற்காட்டில் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்தித்த போது, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் எந்தக் கவலையும் இல்லை. அதிமுகவில் தலைவர் பதவி எதுவும் காலியாக இல்லை. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை சட்டரீதியாக அணுகுவோம் என்றும் கூறியுள்ளார். அதோடு சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சி என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து என கூறினார்.