Skip to main content

ராஜேந்திர பாலாஜியிடம் முதல்வர் சந்திப்பு பின்னணி... அமைச்சர் பதவி தப்புமா? ஆக்ஷன் எடுக்க ரெடியான இபிஎஸ்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

சமீபத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சியில் பேசும் போது,  தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை தூண்டுகின்றது. இது நீடித்தால் இந்து பயங்கரவாதம் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது." என்று பேசினார். அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் ராஜேந்திர பாலாஜி நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசியுள்ளதாகவும், எனவே அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், ராஜேந்திர பாலாஜியின் இந்த செயல் குறித்து ஆளுனரிடம் முறையிட போவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். பின்பு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அது அதிமுகவின் கருத்து அல்ல! எனவே, இதுகுறித்து ஆளுனரிடம் எந்த அடிப்படையில் ஸ்டாலின் முறையிட முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார். 
 

admk



இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சர்ச்சை கருத்து தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் சர்ச்சை கருத்து தொடர்பாக விளக்கம் கேட்க இந்த சந்திப்பு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதோடு சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் பொறுப்பாக பேச வேண்டும் என்றும் எடப்பாடி அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து சர்ச்சை கருத்து தெரிவிப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்