Skip to main content

அதிமுக வட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்! 

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

ADMK members Joined DMK!

 

திமுக ஆட்சி அமைந்ததும் அக்கட்சியில் இணைய அதிமுக தொண்டர்கள் பலரும் விரும்பினர். அமைச்சர்களைச் சந்தித்து தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர். திமுகவை நோக்கி அதிமுகவினர் வருவதை அறிந்த திமுக தலைமை, இணைப்புக்குப் பச்சைக் கொடி காட்டியது. இதனால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் திமுகவில் இணைந்து வருகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

 

இந்த நிலையில், அதிமுகவின் தென்சென்னை மாவட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 168வது வட்ட செயலாளரும் முன்னாள் உறுப்பினருமான ஜே.கெ. மணிகண்டன், 169-வது வட்டச் செயலாளர் ஜே.கே.பரமன் ஆகிய இருவரும் தங்களின் வட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனைச் சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

திமுகவில் இணைந்த அவர்களைப் பாராட்டி கட்சி பணியாற்றிடக் கேட்டுக்கொண்டார் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன். இவர்களைப் பின்பற்றி சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த மற்ற வட்டக்கழக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

 


 

சார்ந்த செய்திகள்