அதிமுகவின் எம்.பி.யான சசிகலா புஷ்பா, தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமசாமியும் ஏற்கனவே திருமணமானவர்தான். இந்த தம்பதிகளுக்குள் தற்போது மோதல் அதிகமாகிவிட்டதாம். கடந்த வாரம், டெல்லியில் நடுராத்திரியில் தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட ரோட்டில் பயந்தபடியே தலைதெறிக்க ஓடிய ராமசாமியைப் பார்த்து ஷாக்கான ரோந்து போலீஸார், அவரை விசாரித்தபோது தன் மனைவி சசிகலா புஷ்பா தன்னை அடித்ததால் மண்டை உடைந்துவிட்டதாகக் கதறியிருக்கார் ராமசாமி.

அவரை சிகிச்சைக்கு அனுப்பிவைத்ததாம் டெல்லி போலீஸ். ஏற்கனவே ராமசாமியின் இன்னொரு மனைவி தரப்பிலிருந்து இன்னொரு புகார் வந்தது. இப்ப, தன்னோட அப்பாவை தாக்கிய சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கணும்னு ராமசாமியின் முதல் மனைவியின் மகள், போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.