தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, பா.ஜ.க. பிரமுகரான கரு. நாகராஜன், கடுமையாக விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி முதலில் பேசும் போது, கொதிநிலையில் இருக்கும் மக்களின் கோபத்தை, எங்களைப் போன்றவர்களின் களப்பணியும் சொந்த நிதியும்தான் தணித்துக்கொண்டு இருக்கிறது. இல்லையென்றால், கோபத்தில் இருக்கும் மக்கள் இந்த அரசையும் பிரதமரையும் கல்லால் அடித்தே விரட்டுவார்கள் என்று சொன்னதை எதிர்த்து பா.ஜ.க. கண்டனக் குரல் எழுப்பியது.
மேலும் ஜோதிமணி பேசியபிறகு தான் கரு.நாகராஜன் பேசினார் என்று, ஜோதிமணியின் இந்தப் பேச்சுக்கு தங்கள் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி எந்தவித ரியாக்சனையும் காட்டவில்லை என்று பா.ஜ.க. தரப்பு அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கின்றனர். பா.ஜ.க. பிரமுகரான நரசிம்மன், இதைச் சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் எடப்பாடியிடமிருந்து நமக்கு ஆதரவான குரல் எழவில்லை என்று பிரதமர் மோடிக்குப் புகார் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறுகின்றனர். உளவுத்துறையும் ஜோதிமணி விமர்சனம் தொடர்பான ரிப்போர்ட்டை மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அனுப்பியிருப்பதாகச் சொல்கின்றனர்.