நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.அதிமுக சார்பாக போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.இதனால் ஓபிஎஸ் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்பதாக சொல்லப்படுகிறது.இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் முதல்வர் எடப்பாடியை அணுகி கட்சியில் இருக்கும் சீனியர்களுக்கு தான் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/rTAtaGJPzIj3ZpKa-Z0UPiJNkpjaGJSSHayhFg4Cw-8/1559117579/sites/default/files/inline-images/278.jpg)
இதனால் எடப்பாடி கட்சியில் சீனியரான வைத்தியலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாஜக தலைமையை கோரியதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் ஓபிஎஸ் தனது மகனுக்கும் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்டு வருவதால் அதிமுகவில் இருக்கும் ஒரு சில சீனியர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரண்டு அணி பிரிந்த போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக சென்ற சில சீனியர்கள் ஓபிஎஸ் நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ளனர்.
இவரை நம்பி ஆதரவு கொடுத்தோம் ஆனால் நமக்காக ராஜ்யசபா சீட் கொடுக்கவும் முயற்சி எடுக்கவில்லை,அமைச்சர் பதவி வாங்கி கொடுக்கவும் முயற்சிக்காமல் தனது மகனுக்காக மட்டுமே பாஜகவிடம் பேசி வருகிறார் என்று சீனியர்கள் கடுப்பில் உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.