Skip to main content

வெற்றி பெறுவதற்கு முன்பே கொண்டாடிய அதிமுக! காத்திருந்த அதிர்ச்சி செய்தி!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி  பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 15ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

 

admk



இதனால் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் அனைவரும் வெற்றி பெற்று விடலாம் என்று சந்தோஷத்தில் இருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் மா.பொ.பாண்டியராஜன் திமுகவின் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றி தொடர்ந்து இடைத்தேர்தல்களிலும் கிடைக்கும்' என்று கூறினார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இதற்கு ஒரு படி மேல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வந்தனர்.



ஆனால் இந்த சந்தோசம் கொஞ்சம் நேரம் கூட நீடிக்கவில்லை. அடுத்து சிறிது நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 7ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதன் பின்பு வந்த அனைத்து சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தே முன்னிலை வகித்து இறுதியில் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை விட அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் அதிர்ச்சி அடைந்தனர். 

சார்ந்த செய்திகள்