Skip to main content

பாஜக கூட்டணி! எடப்பாடி புது முடிவு!

Published on 30/12/2018 | Edited on 30/12/2018

பா.ஜ.க. பதினைந்து தொகுதிகளின் லிஸ்ட்டை கொடுத்து, வருகிற ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்கு வரும்போது கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என டெல்லிக்கு சென்ற அ.தி.மு.க. அமைச்சர்களிடம் சொல்லி இருக்கிறது. 

 

 

ee
கோப்புப் படம்

 

 

வருகிற பிப்ரவரி மாதம் பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு தேர்தல்கால நடைமுறைகள் அமலுக்கு வந்துவிடும். பா.ஜ.க. விதித்த நிபந்தனைகள் மற்றும் அவர்கள் கேட்கும் தொகுதிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஏற்படும் நெகட்டிவ் இமேஜ் இவற்றை பற்றி எடப்பாடிக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. 

 

பிப்ரவரி மாதம் வரை பா.ஜ.க.வுக்கு எந்த பதிலும் சொல்லாமல், பிப்ரவரி மாதத்திற்கு மேல் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கலாம் என்கிற கருத்து அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கு முன்பு பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என அறிவித்தால் எடப்பாடி, ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர் ஆகியோர்கள் மீது வருமானவரி துறை சி.பி.ஐ. என மத்திய அரசின் கீழ் வரும் ஏஜென்சிகள் மூலமாக பாஜக தாக்குதலை தொடுக்கும். எனவே தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கலாம் என எடப்பாடி திட்டமிடுகிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

 

ஆனால், ஜனவரி மாதத்திற்குள் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை இறுதி கட்டத்திற்கு கொண்டுவந்து வைத்துவிடுவோம், தேர்தல் நேரமாக இருந்தாலும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும் அடுத்து எந்த ஆட்சி அமைந்தாலும் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் தப்பிக்கவே முடியாது என அதிமுக கூட்டணி பற்றி பேசும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இப்படி விடா கண்டான் கொடா கண்டான் பாணியில் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுக்கள் நடந்து வருகின்றன என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்