Joker, u type tanglish u rather type in Tamil itself. Tanglish is not international platform in social media - twitter. Like Papu like booboo ???.. PM addressed INDIA not only Tamil Nadu. https://t.co/B1jIQqVHkD
— Gayathri Raguramm (@gayathriraguram) May 13, 2020
நேற்று இரவு 8 மணி அளவில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் பேசியிருந்தார். அதன்படி 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது முடக்கத்தை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த முடக்கம் எதுவரை தொடரும் என்று மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த ஊரடங்கை விட மாறுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த உரைக்கு நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "என் சமையலையாவது நேரத்துக்கு முடிச்சுருப்பேன்... என் நேரம் வீணாகப் போய்விட்டது" என்று ஆங்கில எழுத்துகளால் தமிழில் பதிவிட்டு இருந்தார். அதோடு பிரதமர் மோடி நேற்று எந்த மொழியில் பேசினார். ஏன் இந்தியில் பேசினார் என்றும் கேள்வி எழுப்பினார். நடிகை குஷ்புவின் இந்த கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ஜோக்கர், முதலில் நீங்கள் தமிழில் பதிவு செய்யுங்கள் என்றும், சமூக ஊடகங்களில் டங்லிஷ் சர்வதேச தளம் அல்ல என்றும், 'பப்பு' மாதிரியே 'பூபூ' இருக்கீங்க என்றும், பிரதமர் மோடி இந்தியாவிற்காக உரையாற்றினார். தமிழகத்திற்கு மட்டும் உரையாற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.