விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடிகையும், பாஜக ஆதரவாளருமான நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கூறி வந்தார். அப்போது அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் வணங்கும் தெய்வத்தைப் பற்றி பேசியது எனக்கு கோபத்தைக் கொடுத்தது. அதனால் பேசினேன். அதற்கு மிகவும் கேவலமாக எதிர்வினை வந்தது. எத்தனையோ பேர் எதிர்த்துப் பேசினாலும், என்னை மட்டும் கேவலமாக விடுதலை சிறுத்தைகள் திட்டினார்கள். இதற்கு காயத்ரி ரகுராம் நல்ல ஆண் என்றால் பெண்களை மதிக்க வேண்டும். எந்தப் பெண்ணையும், வேலைக்குப் போகும் பெண்ணையும் தப்பாகப் பேசக்கூடாது. இனிமேல் ஜாதி வெறி, மதவெறி தூண்டக்கூடாது என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.