Skip to main content

பாஜகவை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்... அதிருப்தியில் பாஜக! 

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு  முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. 
 

actor



இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், 'இந்த தேசத்திற்கு தேவை 3000 கோடி செலவு செய்து வைத்த சிலை இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயார் செய்வதை விட வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும்' என பாஜகவை விமர்சித்துள்ளார். மேலும் 'போராட்டக்காரர்கள் மீது அரசு வன்முறையை ஏவினாலும், போராட்டக்காரர்கள் வன்முறையினை கைவிட்டு அறவழியில் போராட வேண்டும்' என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்