Skip to main content

“இது அவருடைய நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் செயல்” - திருமாவளவன்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

"This is an act that tarnishes his reputation," said Thirumavalavan

 

சூதாட்டம் இருப்பது நல்லது எனச் சொல்லக்கூடிய அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.

 

சென்னை  வள்ளுவர்கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கருக்கும் காவி ஆடை, திருநீறு மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் அமைப்புகளைக் கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவள்ளுவர், பெரியார், அண்ணா போன்றோரைக் கொச்சைப்படுத்திய சங்பரிவார் கும்பல் தற்போது அம்பேத்கரையும் கொச்சைப்படுத்தியுள்ளது. அவரது நினைவு நாளன்று அவரது உருவப்படத்திற்கு திருநீறு இட்டு குங்குமம் இட்டு காவி உடுத்தி சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியுள்ளனர். இது அவருடைய நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் அற்பச் செயல். அவரை இழிவுபடுத்தும் போக்கு. இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 

 

சூதாட்டம் இருப்பது நல்லது மகாபாரதத்தில் இருந்தது எனச் சொல்லக்கூடிய அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்சனை குறித்து கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்