திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் பன்றிமலைக்கு சித்தரேவு, சித்தையன் கோட்டை, ஆத்தூர், பாறைப்பட்டி, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கூலி வேலைக்கு போய்வருவது வழக்கம்.
இப்படி கூலிவேலைக்கு போய்விட்டு வழக்கம் போல் அவ்வழியாக வரும் அரசு பஸ்சில் ஊர் திரும்புவது வழக்கமாக கொண்டு உள்ள தொழிலாளர்கள் இன்று மாலை 4மணியளிவில் வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் பன்றிமலைக்கு அரசு போக்கு வரத்து பஸ்சில் ஏறினார்கள். ஆனால் பஸ் புறப்பட்ட சிறிது நேர்த்திலையே பஸ் பிரேக் பிடிக்க வில்லை. எல்லோரும் கம்பியை பிடித்து கொள்ளுங்கள் என்று கூறி முடிப்பதற்குள்ளையே டிரைவர் திடிரென ஒரு தடுப்பில் பஸ்சை மோதியதின் மூலம் பஸ் உருண்டு கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்த 70பயணிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பஸ்சின் டயருக்கு அடியில் சிக்கி பழைய கன்னிவாடியை சேர்ந்த கூலி தொழிலாளியான வேளாங்கண்ணி, சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும்கூலி தொழிலாளர்களை முன்னாள் அமைச்சரரும் இத் தொகுதிஎம்.எல்.ஏ.மான ஐ.பெரியசாமி உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை விசாரித்து ஆறுதல் கூறினார்.
அப்பொழுது திடீரென இன்னால் அமைச்சர் சீனிவாசனும் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள் நுழைந்து ஆறுதல் கூறினார். இப்படி இருவரும் ஒரே நேரத்தில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள் . அதோடு இருவரும் சந்தித்து கொண்டு நலம் விசாரித்து விட்டு அந்த பன்றி மலைக்கு இனி புது பஸ் தான் இனி விட வேண்டும் என ஐ.பி . கூறியதை கேட்ட சீனியும் இனி அந்த பகுதிக்கு புது பஸ் ஒன்று அல்ல இரண்டே விடுகிறேன் என உறுதி கூறினார்.