Published on 17/10/2020 | Edited on 17/10/2020
அ.தி.மு.க கட்சியின் 49-ஆம் ஆண்டு துவக்க விழா இன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். பிறகு, அ.தி.மு.கவின் தலைமை அலுவலத்தில் உள்ள முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, அ.தி.மு.க கட்சிக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தனது தாயார் மறைந்ததையொட்டி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ளார். அதனால், அங்கு அவரது வீட்டின் முன்பாக எளிமையான முறையில் அ.தி.மு.க கட்சிக் கொடியை ஏற்றினார்.