அதிமுக ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இவர் மீது அவரது சொந்த கிராம மக்களே கையெழுத்திட்டு ஊழல் புகார் அளித்துள்ளனர்.
சேவூர் ராமச்சந்திரன் 2016 முதல் 2021 வரை அதிமுக அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்தை விட 11 மடங்கு சொத்து சேர்த்துள்ளார் என்று இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊர் கிராம மக்களே அவர் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் தனது வேட்புமனு தாக்கலின் போது வெளியிட்ட சொத்து விவரத்தை விட அவரது சொத்து அதிகம். சொத்துகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அவர் அமைச்சராக இருந்த போது கோவில் உண்டியல் பணத்தில் கமிஷன், விபூதி, பஞ்சாமிர்த கொள்முதல் டெண்டரில் கமிஷன் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் இதுவரை 200 கோடி ஊழல் செய்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
சேவூர் கிராம மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.