Published on 11/10/2018 | Edited on 11/10/2018
2017-ல் அச்சுறுத்திய ஜிகா வைரஸ் மீண்டும் இந்தியாவில் தலைகாட்டத் துவங்கியுள்ளது. இந்த வைரஸ் 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டது. இதன் பிறப்பிடம் உகாண்டா நாட்டில் உள்ள ஜிகா எனும் காடுதான், அதனால்தான் இதற்கு ஜிகா என்று பெயர் வைக்கப்பட்டது. இது கர்பிணிப் பெண்களையே அதிகம் பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது மீண்டும் இந்த ஜிகா வைரஸ் ராஜஸ்தான் மாநிலத்தில் 29 பேருக்கு உள்ளதாக அம்மாநிலத்தின் சுகதுரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி.' கொசு மூலமாகத்தான் ஜிக்கா வைரஸும் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.