Published on 02/08/2019 | Edited on 02/08/2019
மத்திய பிரதேசத்தில் இருக்கும் இளைஞர் ஒருவரின் பெயர் ராகுல் காந்தி. இவர் இந்தூர் பகுதியில் துணி கடை வைத்துள்ளார். இவர் சிம் கார்டு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் அடையாள அட்டை எதாவது இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் ஆதார் கார்டை கொடுத்துள்ளார். அதில் அந்த இளைஞனின் பெயர் ராகுல் காந்தி என்று இருந்துள்ளது. அதற்கு அந்த சிம் கார்டு கடைக்காரர் போலி அடையாள அட்டை என்று சந்தேகம் அடைந்துள்ளார்.இதே போல் மற்றவர்களிடம் தன்னை அறிமுகம் படுத்தும் போது தனது பெயர் ராகுல் காந்தி என்று சொல்லும் போது அவர்கள் போலியான பெயரை கூறுகிறார் என்று சந்தேகத்துடன் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பெயரால் அவதிப்பட்ட இளைஞர் இது குறித்து சொல்லும் போது, எனது அப்பா ராஜேஷ் மாளவியா, இவர் துணை ராணுவப் படையில் சலவையாளராக பணியாற்றும் போது, அவரை அனைவரும் காந்தி என்று அழைத்துள்ளனர். பின்னர் காந்தி என்ற பெயரை தனது பெயருடன் இனைத்து கொண்டார். இதன் பிறகு என்னை பள்ளியில் சேர்க்கும் போது ராகுல் மாளவியா என்பதற்கு பதிலாக ராகுல் காந்தி என பெயரை பதிவு செய்தார்' என கூறியுள்ளார். தற்போது இந்த பெயர் குழப்பத்திற்கு முடிவு செய்ய நினைத்த அந்த இளைஞர் ராகுல் காந்தி என்ற பெயருக்கு பதிலாக ராகுல் மாளவியா என்று மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக சொல்லப்படுகிறது.