ராஜஸ்தானைச் சேர்ந்த அஜஸ் முகமது கான். இவர் நையினா மங்ளானி என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவரும் நண்பர்களாக அடிக்கடி பேசி நட்பை வளர்த்துள்ளனர். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலிக்கும் போது இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் சாட் செய்து கவந்துள்ளனர். பின்பு இவர்களின் காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து இரு வீட்டு சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் நையினா மங்ளானி பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் நைனா அவரது கணவருடன் நேரத்தை செலவிடாமல் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜஸ் முகமது கான் அவரது மனைவி நையினாவின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பேஸ்புக் நண்பர்களுடன் அதிகளவில் சாட் செய்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அஜஸ் முகமது கான் அவரது மனைவி நையினாவிடம் கேட்டுள்ளார். இதனால் மீண்டும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கோபப்பட்டு நையினா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனைத்தொடர்ந்து நையினாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதற்கு பிறகு இருவரும் ஒன்றாக பல இடங்களை சுற்றி உள்ளனர். அப்போது நையினா பேஸ்புக்கை மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் நையினாவை டெல்லி ஜெய்ப்பூர் ஹைவேஸ் சாலைக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
மேலும் மனைவியின் முகத்தில் கல்லைப் போட்டு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹைவேஸ் பகுதியில் நையினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு நையினாவின் கணவர் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.