Skip to main content

யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் பின்தங்கிய பா.ஜ.க!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
யோகியின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் பின்தங்கிய பா.ஜ.க!

உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் பா.ஜ.க பெரும்பான்மை வார்டுகளில் வெற்றிபெறாமல் பின்தங்கியுள்ளது.



உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று அதில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் உள்ள 1600 வார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு வெற்றி கூட பெறவில்லை என்பதுதான் உண்மை.

இது ஒருபுறம் இருக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட சீத்தாராம் ஜெய்ஸ்வால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராகுல் குப்தாவை 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், அந்தத் தொகுதியில் உள்ள 70 வார்டுகளில் பா.ஜ.க 27 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மீதமுள்ள வார்டுகளில், சமாஜ்வாதி 18 சீட்டுகளும், சுயேட்சைகள் 18 சீட்டுகளும், பகுஜன் சமாஜ்வாதி 5 சீட்டுகளும், காங்கிரஸ் கட்சி 2 சீட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். அதாவது வார்டு வாரியாக மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரபூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்தத் தொகுதியிலேயே கடும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது பா.ஜ.க.

சார்ந்த செய்திகள்