Published on 10/08/2019 | Edited on 10/08/2019
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார்.
அவருடன் உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, அசாம் மாநிலப் பிரதிநிதிகளும் செல்கின்றனர். அண்மையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பெருமளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்ட நிலையில், அதன் அடுத்தகட்டமாகவே தற்போது யோகி ஆதித்யநாத் ரஷ்யா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது உணவு பதப்படுத்துதல் தொழிற்கூடம் அமைப்பது, நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவது, விவசாயத்தை மேம்படுத்துவது மற்றும் எரிசக்தி துறைசார் தொழில்கூடங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளது. மேலும், விளாடிவோஸ்தக் நகரில் இந்திய - ரஷ்ய தொழில் முனைவோர் இடையே 6 வர்த்தகச் சந்திப்புகளும்நடைபெறவுள்ளன.