யஷ்வந்த் சின்காவின் சர்ச்சை பேச்சு
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா அண்மையில் மத்திய அரசின் நிதி கொள்கையை விமர்சித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் சரிந்து விட்டது. ஜிஎஸ்டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அவர் மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையை விமர்சித்துள்ளார்.
காஷ்மீரை நாம் உணர்வு ரீதியாக இழந்து விட்டோம் என பாஜ மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.