குஜராத் மாநிலத்தில் பணி நேரத்தின்போது டிக்டாக்கில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மெஞ்சானா காவல்நிலையத்தில் பணியாற்றி வருபவர் பெண் காவலர் அலபிதா சவுத்ரி. இவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் இருந்தவாறே டிக்டாக்கில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதள பக்கத்தில் பகிந்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
मेहसाणा के लांघनज पुलिस स्टेशन की महिला कॉन्स्टेबल अर्पिता चौधरी फिर विवादों में। पुलिस स्टेशन के अंदर ही बनाया वीडीयो-- @tiktok_us ऐप पर शेयर किया। विवाद सामने आने के बाद #TikTok से डिलीट किया। @indiatvnews @IndiaTVHindi @dgpgujarat @PradipsinhGuj pic.twitter.com/Vt57KnwAzD
— Nirnay Kapoor (@nirnaykapoor) July 24, 2019
பணி நேரத்தில் இந்த செயலில் ஈடுபடலாமா என்று பெண் காவலரை பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதற்கிடையே உயர் அதிகாரிகள் அந்த பெண் காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்கள். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.