நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகையில், “சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். இதனால் குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். ராமர் கோயிலில் புல்டோசர் ஓட்டுவார்கள். யோகியிடம் இருந்து புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது எனக் கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பேசியுள்ளார்.
புல்டோசரை' எங்கு இயக்குவது என்பது குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இருந்து இந்திய கூட்டணியினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதவி விலகும் பிரதமர் இன்று கூறியுள்ளார். யோகியின் 'புல்டோசர்' எப்படி பட்டியலின, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரானது என்பதைப் பாருங்கள். இடஒதுக்கீடு குறித்து யோகியின் கருத்துக்களால் தான் யோகியை ஆதரிப்பதாக பிரதமர் தெளிவாக கூற வேண்டும். இதுதான் 400 இடங்களை வெற்றி பெறுவோம் என்று அவரது முழக்கத்தின் ரகசியம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான 400 இடங்களைக் கொண்டு, பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பைத் திருத்தவும், பட்டியிலன, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்க இதை விரும்புகிறார்.
பல தசாப்தங்களாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ் சதியை செயல்படுத்த நினைக்கிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை ஒழித்து மனுவாதி சிந்தனையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி பல ஆண்டு கால சதியை செயல்படுத்த பா.ஜ.க விரும்புகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.