தன்னை சந்தித்தற்காக மனோகர் பரிக்கருக்கு பிரதமர் மோடி கடும் நெருக்கடி கொடுக்கிறார் என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தன்னை சந்தித்த பிறகு மனோகர் பரிக்கருக்கு மோடியிடம் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் தன்னை மனோகர் பரிக்கர் தாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது பரிக்கர் கவனத்திற்கு வரவில்லை என்று அவரே தம்மிடம் கூறியதாக ராகுல்காந்தி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மனோகர் பாரிக்கர் தன்னிடம் உடல்நலம் விசாரித்ததில் கூட மலிவான அரசியல் இருந்துள்ளது என்று ராகுல்காந்திக்கு கடிதம் எழுதினார். இதனை அடுத்து ட்விட்டரில் ராகுல் காந்தியை பலர் கடுமையாக விமர்சித்தனர். பின்னர், பரிக்கருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள ராகுல்காந்தி இருவரது சந்திப்பின் போது பேசிய எதையும் நான் வெளியில் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.