சபாிமலையில் யானை மிதித்து தமிழக பக்தா் ஒருவா் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாிமலையில் மண்டல மகர கால சீசன் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் சபாிமலைக்கு வரக்கூடிய பக்தா்கள் குறைவாக இருந்தாலும் தற்போது பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது.
இந்த நிலையில் சேலத்தை சோ்ந்த பரமசிவம்(35) உட்பட அய்யப்பா பக்தா்கள் சிலா் இருமுடிகட்டிக்கொண்டு தேனி கம்பம் வழியாக சபாிமலைக்கு சென்றனா். அவா்கள் இன்று அதிகாலையில் எாிமேலி பம்பை கானக பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது முகுழி தீா்த்தம் வள்ளி தோடு அருகே மறைவாக நின்று கொண்டிருந்த யானை ஒன்று திடீரென்று பரமசிவனை தும்பி கையால் தூக்கி காலால் மிதித்தது.
இதைப்பாா்த்து அலறிய அவருடன் வந்த பக்தா்கள் சத்தம் போடவே பரமசிவனை ரத்த வெள்ளத்தில் அங்கே போட்டு விட்டு காட்டுக்குள் ஓடியது. உடனே அங்கு வந்த வனத்துறையினரும் மற்ற பக்தா்களும் சோ்ந்து பரமசிவனை தூக்கி பம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாிதாபமாக அவா் உயிாிழந்தாா்.
ஜனவாி மாதங்களில் இதே வழியாக தான் யானைகள் கும்பலாக செல்வது வழக்கமாக கொண்டுள்ளது. அதனால் இந்த மாதங்களில் இந்த வழியாக வரக்கூடிய பக்தா்கள் கவனமாக செல்ல ஏற்கனவே வனத்துறை எச்சாித்துள்ளது.
இதே போல் தான் கடந்த ஆண்டும் இதே நாளில் இந்த வழியாக வந்த சென்னையை சோ்ந்த அய்யப்பா பக்தா் நிரேஷ் குமாா் யானை மிதித்து உயிாிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.