Published on 28/08/2021 | Edited on 28/08/2021
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் கரண் விகாஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அவருடைய மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அவருடைய மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு மாதம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால், அதிருப்தி அடைந்த கரண் விகாஷ், தன்னுடைய மச்சானை கடத்தியுள்ளார். இதன் மூலம் மனைவி மீண்டும் வீட்டிற்கு வருவார் என்று அவர் நினைத்துள்ளார். ஆனால் மனைவி வீட்டில் காவல்துறையில் புகார் கொடுக்கவே, அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் மச்சானை அருகில் உள்ள வயலில் இறக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.