Published on 09/07/2018 | Edited on 09/07/2018

ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளிநபர்கள் யாரும் தாஜ்மகாலில் தொழுகை நடத்தக்கூடாது என்று ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்தது. தாஜ்மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை சேர்ந்த சையத் இப்ராகிம் ஹுசைன் சைதி என்பவர் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு, ’’தொழுகை நடத்த பல்வேறு இடங்கள் உள்ளன. தாஜ்மகாலை உலக அதிசயங்களில் ஒன்று என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஆக்ராவில் வசிப்பவர்களை தவிர மற்ற பகுதியில் இருந்து சுற்றுலா வருபவர்கள் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது’’என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.