போலியான செய்திகள் அதிகம் பகிரப்படுவது வாட்ஸ் ஆப் மூலமாகத்தான் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதில் ஒரு விதமாக வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் போலி செய்திகளை தொழில்நுட்ப ரீதியாக மேலும் கட்டுப்படுத்த வாட்ஸப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது அறிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்மறையான போலியான வைரல் செய்திகளை கட்டுக்குள் கொண்டுவர அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வரவுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்திய தலைவர் அபிஜித் போஸ், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வாட்ஸப் குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், 70 சதவீத மக்கள் தங்களது சிறு குறு தொழில்களை மேம்படுத்த வாட்ஸ்அப் -ஐ பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு இதுகுறித்து பல அழுத்தங்களையும் கொடுத்து வரும் நிலையில், புதிய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் முயற்சியில் வாட்ஸ் ஆப் இறங்கியுள்ளதாக அபிஜித் போஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.