Skip to main content

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை பீகாரில் 2ம் கட்ட வாக்குப்பதிவு!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
வ

 

 

பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட தேர்தல் நவம்பர் 3- ஆம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் நவம்பர் 7- ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

 

கரோனாவால் ஒரு வாக்குச்சாவடியின் அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டோர், கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு, மாற்று நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 10- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. நாட்டின் கரோனா பொதுமுடக்க சூழலுக்கு பிறகு முதல்முறையாக தேர்தல் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்