கிளாஸ் லீடர் பொறுப்புக்காக நடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 13 வயதான சிறுவன், தனது வகுப்புக்கான லீடர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால் இந்த தேர்தலில் தோல்வியடைந்த அந்த சிறுவன், மனமுடைந்து கடந்த 18 ஆம் தேதி வீட்டை விட்டு சென்றுள்ளான்.
இரண்டு நாட்களாக அந்த சிறுவனை பெற்றோர் தேடி வந்த நிலையில், இன்று அந்த சிறுவனின் உடலானது அப்பகுதியில் உள்ள ரயில் பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்பின் நடந்த முதல்கட்ட விசாரணையில், தேர்தல் தோல்வி காரணமாகவே அந்த சிறுவன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கிளாஸ் லீடர் ஆக முடியாததால் 13 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.