![sdfgv](http://image.nakkheeran.in/cdn/farfuture/T_KQsd3VxRnE_fLXLNXtOk1a8bQel7Z9C9lz4WRyviQ/1545398274/sites/default/files/inline-images/Shah_Web--in.jpg)
மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த 2005 ஆம் ஆண்டு சோராபுதீன் என்பவர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. 2005 ல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என கூறி குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சோராபுதீன் போலீஸ் காவலில் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதும் இதற்காக வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கினை கடந்த 2010 ஆம் ஆண்டு சிபிஐ விசாரிக்க ஆரம்பித்து, 8 ஆண்டு கால வழக்கு விசாரணைக்கு பின் இன்று இதில் தீர்ப்பளித்துள்ளது சிபிஐ நீதிமன்றம். அதன்படி சரியான ஆதாரங்கள் இல்லாததால் அமித் ஷா உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய 22 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. 8 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த வழக்கில் 93 சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இறந்த சோராபுதீனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் நீதிபதி கூறினார்.