Skip to main content

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு; டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

 

saj

 

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 1984, அக்டோபர் 30-ஆம் தேதி அவருடைய சீக்கிய பாதுகாவலர்களால்  சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக நாடு முழுவதும் சீக்கியர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லி ராஜ்நகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமார் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு சஜ்ஜன்குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம், சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்