Published on 14/08/2022 | Edited on 14/08/2022
![Vehicles are lined up in Alibiri!](http://image.nakkheeran.in/cdn/farfuture/cOp2-PCVQUFdOTgRGwClQoJMRz1CZqVjnvUMa2xZkf8/1660499601/sites/default/files/inline-images/car1222.jpg)
தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், இலவச வழிபாட்டிற்காக இரண்டு நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையின் அடிவாரமான அலிபிரியிலேயே வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. வைகுண்டம் காத்திருக்கும் மண்டபத்தில் உள்ள 62 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி நீண்டத் தொலைவிற்கு காத்திருக்கின்றனர். இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இரண்டு நாட்கள் ஆவதாகக் கூறுகின்றனர்.
திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழிவதால், விஐபி பிரேக் தரிசனத்தை வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.